Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

உதிப்பேனென்று போன ஆதவன்

முதற்பக்கம் NNT செய்திகள் NTT சஞ்சிகைகள் mp3ஆடியோ புகைப்படங்கள் வீடியோ திரைப்படம் நிழற்படங்கள் தொடர்புகளுக்கு  கவிதைகள் மாவீரர் உரை தலைவரின் புதிய படங்கள் எம்மைப் பற்றி Blog Guestbook

உதிப்பேனென்று போன ஆதவன் !

   
அன்னையின் மடியில் உதிப்பேனென்று போன ஆதவன் !

அன்னையின் மடியில் உதிப்பேனென்று போன ஆதவன் !

ஒருவருடைய தகுதியை அடையாளம் காண்டு கொள்ள அவர் எடுத்த பட்டங்களையும், அவருக்குக் கிடைத்த பட்டங்களையும் முன்னும் பின்னும்  போட்டுக் கொள்வது இன்றய மரபு. மனிதர்களோடு பொருத்தாது பெயர்களோடு மட்டும் பொருத்தி வைக்கும் இந்த எழுத்துக்களையும், சொற்களையும் பட்டங்கள் என்கிறார்கள். பட்டங்களால் புகழ் வானில் பறந்தவர்களும் உண்டு. பட்டங்களின் மதிப்பை காற்றில் பறக்கவிட்டவர்களும் உண்டு.

பட்டங்களில் ஊழல்கள் நிலவலாம் ! ஆனால் எந்த ஊழலுக்கும் சிக்குப்படாத பட்டமொன்று உண்டு ! அதுவே ஆதிகாலத் தமிழரால் மதிக்கப்பட்ட உயர் தகுதியான விழுப்புண் ! ஆதிகாலத்தில் ஒருவருடைய தகுதியை விழுப்புண்களாலேயே அளந்தார்கள். போர்க்களம் சென்று ஒருவர் மார்பில் எத்தனை காயங்களை ஏந்தினார் என்பதுதான் அந்தத் தகுதி. போர்க் காயங்களின் எண்ணிக்கையே ஒருவனுடைய தகுதிக்கு முதல் அடையாளமாக இருந்தது.

பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் வரலாற்று நாவலில் பெரிய பளுவேட்டையர் என்ற ஓர் பாத்திரம் வரும். போர்க்களம் சென்று உடலில் 64 விழுப்புண்களை ஏற்றபடியால் ராஜராஜ சோழனைவிட உயர்ந்த பாத்திரமாக அவர் சித்தரிக்கப்படுவார். இவை விழுப்புண்களின் சிறப்பிற்கு நல்ல உதாரணங்களாகும்.

இந்த உதாரணங்களை முதலில் மனதில் தீட்டிக்கொள்வோம். ஏனென்றால் தமிழீழப் போரில் அதிகூடிய விழுப்புண்களை ஏற்ற வீரர்களின் வரிசையில் முக்கியமான ஒருவனாகிய மேஜர் ஆதவனைப் பற்றிப் பேசுவதானால் இவைகள் அவசியம்.

உடம்பிற்கு இன்னொரு பெயர் காயம். உடம்பு காயங்களால் மதிக்கப் பட்டதற்கு இந்தக் காயம் என்ற சொல்லே நல்ல உதாரணமாகும். இத்தகைய மதிப்பு மிக்க காயங்களால் தன்னை தகமைப் படுத்திக் கொண்டவனே இந்த ஆதவன். இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இவன் பாடசாலை மாணவன். அவர்கள் ஏவிய செல்லின் துணிக்கையொன்று தேடிவந்து இவனுடைய கையைப் பிய்த்துச் சென்றது. அதற்குப் பின்னர் 90 களில் இயக்கப் போராளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும்போது எறிகணை வீச்சில் தொடையில் காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான். இது இரண்டாவது அனுபவம் !

அந்தச் செல் துணிக்கை நரம்பிற்குள் புதைந்து விட்டதால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. வேதனையுடன் அதையேற்று நடந்து, அந்த வலியை வாழ்வின் ஓரங்கமாகவே மாற்றிக் கொண்டான். பின்னர் அச்சுவேலியில் ஒரு மோதல் ! காயங்களுக்குப் பயப்படாத அவன் காலில் முத்தமிட்டு மகிழ்ந்தது ஒரு குண்டு ! அதற்கு தனது ஒரு கால் விரலையே பரிசாகக் கொடுத்து மீண்டான். இது நிகழ்வு மூன்று !

அவன் நடக்கும்போதே சிறிது வேதனையுடன்தான் நடப்பான் காரணம் எவருக்கும் தெரியாது. இயக்கத்தில் சேர்வதற்கு முன்னரே அமைதிப்படை அவனைக் கைதுசெய்து பட்டினி போட்டு அடித்துத் துன்புறுத்தி, உள்ளங்காலை உடைத்து பதம் பார்த்திருந்தது. அதனால் பட்ட விழுப்புண்கள் அவன் தேகம் முழுவதும் மறைந்து கிடந்தன.

பின்பு 1995 சூரியக்கதிர் நடவடிக்கை வருகிறது. பகைவரை தடுத்து நிறுத்தும் கடும்போர். பாய்ந்து வந்த குண்டு அவனுடைய சொக்கை பிளந்து, தாடை எலும்பை உடைத்து கடைவாய்ப் பற்களையும் பிடுங்கிச் சென்று விடுகின்றது. மாபெரும் காயம் ! அவன் உடலில் கற்பனை பண்ணமுடியாத பாரிய விழுப்புண் !

அவன் அழகாகத் தமிழ் பேசிய நாக்கு அறுந்து நு}லிழையில் தொங்குகிறது. பேசும் சக்தியையே இழந்து போகிறான். ஆனாலும் அவன் தளர்ந்து போய்விடவில்லை. கையில் ஓர் கொப்பியை வைத்துக் கொண்டு மற்றப் போராளிகளுக்கு எழுதி எழுதிக் காட்டியபடியே தன் போராட்ட வாழ்வைத் தொடர்கிறான். பின்னர் நடைபெற்ற இரண்டாவது சத்திர சிகிச்சைக்குப் பிறகுதான் ஓரளவு பேசும் சக்தியைப் பெற்றான்.

தமிழீழப் போராட்டக் களத்தில் ஆயுதம் வைத்திருக்கும் எல்லாப் போராளிகளும் காப்பரண் வைத்துக் கொள்வார்கள். கரும்புலிகள் கூட இலக்கைத் தொடும்வரை காப்பரண் வைத்தே நகரவேண்டி வரும். ஆனால் கையில் ஆயுதம் இல்லாமல், காப்பரண் இல்லாமல் போர்க்களத்தில் நிற்பதற்கு யாரால் முடியும் ?

அதற்குரிய தகுதியை எப்படி மதிப்பிடலாம் ? உடலில் யார் அதி கூடிய விழுப்புண்களை ஏற்றிருக்கிறாரோ அவருக்குத்தான் அந்தத் தகுதி வரும் ! கையில் ஆயுதமும், காப்பரணுமின்றி போராட்டக் களத்தில் வீடியோ கமேராவை ஏந்தி நடப்பதற்கு அத்தகைய விழுப்புண்ணுக்கு அஞ்சாத வீரரே தகுதியுடையவர்கள்.

அத்தகைய விழுப்புண் ஏந்திய வீரர் பலர் தமிழீழப் போராட்டக் களத்தில் வீடியோ கமேராவை ஏந்தி நடந்தனர். அவர்களில் பலர் குண்டடிபட்டு வீழ்ந்தும் மடிந்தனர். உயிர் கொடுத்து படம் பிடித்து உலக வரலாற்றில் நாயகர்களுமானார்கள். இந்த ஆதவனோ வீடியோ படப்பிடிப்பு கல்லு}ரிக்கே அதிபராக இருந்தவனென்றால் அவன் ஏற்றிருந்த விழுப்புண்களின் தொகையை எண்ணவோ எழுதவோ எவரால் முடியும் ?

கடந்த 18.10.2000 த்தன்று இராணுவ மினி முகாம் மீது ஓர் தாக்குதல் நடைபெற்றது. நிஜமான ஒளிப் படங்களுடன் வருகிறேனென்று புறப்பட்டவன் ஒளிப்படக் கருவியுடன் களத்திலேயே காவியமாகிப் போனான் ! அவன் வீரஉடல் தமிழீழத்திற்கு வந்தது. அத்தருணம் அவன் தகப்பனும், தாயும் ஓடிச் செல்ல முடியாமல் இன்னொரு இடத்தில் தவித்துக் கொண்டிருந்தார்கள். தாய்க்குத் தாயாக, தாயின் மறு வடிவாக பெண் போராளியான அவன் உடன் பிறந்த சகோதரி அவன் வித்துடலை மரியாதையுடன் வரவேற்றாள் !

அந்தப் புகழுடலை அவள் பொறுப்பேற்றபோது என்ன நினைத்திருப்பாள் என்பது அவளுக்கும் அவனுக்குமே தெரிந்திருக்கக் கூடிய பாச உணர்வலைகள் ! அதை அவர்கள் சொல்லா விட்டாலும் அந்த இடத்தை நாம் புறநானு}ற்றுப் பாடலில் காணமுடியும். போர்க்களத்தில் புறமுதுகு காட்டாது மார்பிலே வேலேந்தி களத்திலே விழுந்த புறநானு}ற்று வீரமகனின் புகழ் கண்டு இறும்பூதடைந்த தாயின் கண்களில் வடிந்த ஆனந்தக் கண்ணீரே அன்று அவன் அக்காவின் கண்களிலும் துளிர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அவனைக் காணமுடியாது துடிக்கும் தாயுடன் அத்தருணமே பேசிப் பார்த்தேன். அவள் சொன்னாள், அவனை நானே போர்க்களம் அனுப்பினேன் ! ஆனால் எனக்கொரு கவலை ! அவனால் சரிவர உணவைச் சப்பிச் சாப்பிட முடியாது. அவனுக்கேற்ற உணவை அருகில் இருந்து ஊட்ட முடியவில்லையே என்றுதான் ஆதங்கப்பட்டாள்.

அந்த வரிகளைக் கேட்டதும் என்னுள்ளத்தில் போர்க்களத்திலே மாவீரராகி வீர சுவர்க்கம் புறப்படும் வீரர்களுக்கு அவர்களுடைய மறத்தாய்மார் களத்தில் இறுதிப் பாலு}ட்டும் காட்சியே கண்ணில் வெட்டி மறைந்தது. ஆதவன் கடைசி நேரத்தில் தாய் ஊட்டும் களத்துச் சோற்றை உண்ணாமலே ஏன் பயணித்தான் ? அந்தத் தாய் அவனுடலை ஏன் காண முடியவில்லை ? மனது துடித்தது.. ஆனால் அதற்கும் காரணமிருந்தது.

ஆதவன் தான் இறந்தால் பெற்றோரிடம் சேர்க்கும்படி எழுதியிருந்த கடிதத்தை படித்தபோது அதில் சில பதில்கள் இருப்பதாகப் பட்டது. நான் மறுபடியும் பிறந்தால் அந்தத் தாய் மடியில் தோன்றுவதையே பேறாகக் கருதுகிறேன் என்று எழுதியிருந்தான். அவன் தாயையும் தாய் மண்ணையும் வேறு வேறாகக் கருதியவனல்ல. அவன் தாயிடமிருந்தும் தாய் மண்ணிடமிருந்தும் விடைபெற ஆசை கொள்ளவில்லை. மறுபடியும் வருதற்குத்தான் ஆசை கொண்டிருக்கிறான். மறுபடியும் மண்ணில் உதிக்கும் மாவீரன் கடைசிநேர களத்துப் பால் குடிப்பதில்லை என்ற மரபை அவன் கடிதம் சுட்டிக் காட்டியிருப்பது தெரிந்தது.

அதே கடிதத்தில் இன்னோர் இடத்தில் எழுதும்போது தமிழீழம் மலர்வதை என் இரு கண்களாலும் காண வேண்டும். அதனால்தான் என் இரு கண்களையும் தானம் கொடுக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்த வரிகள் கண்களை உலுக்கின..

போராளியாய் ....

வேவுப்புலியாய் ....

பயிற்சியாளனாய் ....

ஒளிப்படப் பிடிப்பாளனாய் ....

அவனுக்கு தமிழீழப் போராட்டப் பாதையில் எத்தனையோ முகங்கள். தன் இறுதிக் கடிதத்தில் இன்னொரு செய்தியையும் அவன் சொல்லியிருந்தான் ! சுதந்திர தமிழீழம் அமைவதை நிச்சயம் பார்ப்பீர்கள் என்பதே அந்த வரி !

ஆம் ! தமிழீழம் மலரும் !

சுதந்திர தமிழீழத்தின் விடிவின் முதல் நாளிலே கீழ் வானில் வரும் முதல் சூரியனின் ஒளியிலே தமிழீழ மண் தெரியும் ! அந்த வெளிச்சத்தைத் தரும் முதல் ஆதவனாய் அவன் வருவான்!

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை !

வணக்கம் !

BY TIGERSLAND TEAM RUBAN,MOHAN, CONTACT US JASISIVA@HOTMAIL.COM AND liltamilpuli@hotmail.COM