Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு !

விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு !

விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு !

விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு !

உலகத்திலேயே போர்க்களங்களுக்காக தரை மார்க்கமாக அதிக து}ரம் பயணம் செய்தவன் மாவீரன் மகா அலெக்சாண்டர் என்று கூறுகிறார்கள். ஓடும் குதிரையிலேயே ஒரு நொடி உறங்கி ஐரோப்பா முதல் எகிப்துவரை வீர நடை பயின்றவன் மாவீரன் நெப்போலியன்.

இந்த இரண்டு வீரர்களுமே மிகவும் குறுங்காலம்தான் வாழ்ந்தவர்கள். ஆனால் சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் உலக மானுடர்களால் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருபவர்களும் இவர்கள்தான்.

இவர்களுடைய வெற்றிக்கான காரணங்களை நோக்கினால் முதல் சிறப்பு துணிவு! அதைவிடப் பெருஞ்சிறப்பு அவர்களிடம் இருந்த காலத்தை விரயம் செய்யாத மின்னல் வேகம். இவை இரண்டுமே உலக அரங்கில் அவர்கள் இருவரும் பெற்ற வெற்றியின் அடி நாதமாகும்.

சிறு வயது முதலே இவ்விருவரையும் மனப்பாடம் செய்து வைத்திருந்த நான் அவர்களையொத்த துணிவும், மின்னல் வேகமும் கொண்ட வீரனை தமிழீழத்தில் கண்டேன் ! அவர்தான் கேணல் கிட்டு !

அப்போது நான் ஓர் பிரபல பத்திரிகையின் செய்தியாளராக இருந்தேன். அருகில் எங்காவது போர் நடந்தால் அந்த இடத்திற்கு நேரடியாகப் போவேன். அப்போதுதான் எங்கு போர் நடந்தாலும் அந்த இடத்திற்கு எல்லோரையும் விட முதலாவதாக மின்னல் வேகத்தில் வரும் ஒருவரைப் பற்றி அறிந்தேன் அவரே கேணல் கிட்டு.

யுத்த நிறுத்தமொன்று அமுலில் இருந்தபோது ஒரு நாள் அதிகாலை பொழுது புலராத வேளையில் இராணுவம் பொலிகண்டிக் கரையில் இறங்கி தவழ்ந்து வந்தது. விடுதலைப் புலிகளை பிடிக்க வந்தவர்கள், சொற்ப நேரத்தில் விடுதலைப் புலிகளின் பிடியிலேயே சிக்கிக் கொண்டார்கள். போர் தீப்பற்றிக் கொண்டது. அந்த இடத்தை விட்டு து}ர இடங்களுக்கு பாதுகாப்பு தேடி நகர்ந்தனர் மக்கள்.

அப்பொழுது வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் எமக்கு எதிர்ப்புறமாக வந்தது. தோளில் றொக்கட் லோஞ்சர், பின்னால் இருக்கையில் இன்னொருவர். களத்தை நோக்கி மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அவர்தான் கேணல் கிட்டு.

இன்னொரு நாள் தட்டி வானில் சென்று கொண்டிருந்தேன். கடற்படை ஒரு சிறிய போட்டில் வந்து கரையில் இறங்கியது. நல்ல நோக்கத்திற்காக அவர்கள் அங்கு வந்திருக்க முடியாது. சொற்ப து}ரம் போயிருக்க மாட்டோம் சரமாரியான துப்பாக்கி ரவைகள் வெடித்துப் பறப்பது கேட்டது. அங்கும் வேகமாக வந்திருந்தது கிட்டுவின் மோட்டார் சைக்கிள்தான் என்று அறிந்தேன். கடற்படை பலத்த இழப்புக்களுடன் உயிர் தப்பி ஓடியது. அன்று நடக்க இருந்த அனர்த்தத்தில் இருந்து மக்கள் காக்கப் பட்டனர்.

இன்னொரு நாள் வல்வை இராணுவ முகாம் மீதான தாக்குதல். ஓர் நாள் அதிகாலை குறுகிய நேரத்தில் அந்த அதிரடி நடைபெற்றது. யாருமே எதிர் பார்க்காதவாறு மின்னல் வேகத்தில் இராணுவ முகாமை ஊடறுத்துச் சென்றார். அந்த முகாமின் தவறான இருத்தலை இராணுவத்திற்கு தனது மின்னல் வேகத் தாக்குதலால் புரிய வைத்தார்.

எதிரி ஒன்றைச் சிந்திக்க முன்னர் மின்னல் வேகத்தில் நு}றுபடி சிந்திக்கும் வல்லமை பெற்றவர் இந்த வீரர். டைனசோர்கள் உருவத்தில் பெரியவைதான் ஆனால் மின்னல் வேகத்தில் ஓடும் சிறு விலங்குகளால் தாக்கப்பட்டு அவை தோல்வியடைந்து அழிந்தது வரலாறு.

சிறிலங்கா இராணுவமும் டைனசோர்கள் போல பெரியது. எனவேதான் மின்னல் வேகத்தில் இயங்குவதுதான் அவர்களை வெற்றி கொள்ளும் வழியெனக் கண்டு, யாழ். மண்ணை தேசியத் தலைவரின் வழிகாட்டலோடு மீட்டெடுத்தார். தலைவரின் எண்ணங்கள் ஈடு இணையற்றவை. அதை நிறைவேற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையாளருமானார் கேணல் கிட்டு.

இப்படி கிட்டு போன போர்க்களங்கள், அவர் ஆற்றிய கருமங்கள் எல்லாவற்றையுமே சீர்து}க்கிப் பார்த்தால் எங்கும் வேகம் ! எதிலும் வேகம் ! அதுதான் கிட்டு என்பது தெரியவரும். ஐரோப்பிய நாட்டில் அவர் வாழ்ந்த காலத்தில் ஏதாவது காரியங்கள் தேக்கமடைந்தால் அவரின் காதில் போட்டாலே போதும் காரியங்கள் மின்னல் வேகத்தில் நடந்துவிடும் என்பார்கள்.

ஊறணியிலும் நிற்பார், ஊரெழுவிலும் நிற்பார், போர்க் களத்திலும் நிற்பார், போகும் வழியில் வீதியோரத்தில் வயோதிபருடன் பேசிக் கொண்டும் நிற்பார். சிறுபொழுது கழித்தால் சிறுவரோடு கதைத்துக் கொண்டும் போவார். இங்கிலாந்தில் இருந்தாலும் ஓய்வு நேரத்தில் ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருப்பார். இப்படி எங்கும் எதிலும் வேகமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த போராளி இவர்!


மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஒரு நாள் அச்சுவேலிக்கு அருகாமையில் இராணுவத்திடம் அகப்பட்டு விட்டார். ஒரே கணம் மின்னல் மூளை வேலை செய்தது அதிலிருந்து கச்சிதமாகத் தப்பினார். கிட்டு என்பது மூன்றே மூன்று எழுத்துத்தான் ஆனால் அந்த மூன்றெழுத்து மந்திர ஒலி போல எங்கும் புகழ்பெறக் காரணமாய் அமைந்தது அவரிடம் இருந்த வேகமே என்றால் அது மிகைக் கூற்றல்ல.

எதை எடுத்தாலும் நாம் விரைவாகச் செயற்பட வேண்டும். அதுவே வெற்றியின் இரகசியம் என்று பல இடங்களில் அவர் மின்னல் வேகத்தை வலியுறுத்தி உள்ளார். அலெக்சாண்டரும், நெப்போலியனும் கிட்டு போல காலை இழந்திருந்தால் களத்து வீரராக நடந்திருப்பார்களா என்பது சந்தேகமே. நீரில் நின்று போர் செய்யும் போது நெருப்பேந்தி மடியலாமென கிட்டுபோல அவர்களின் மூளை மின்னல் வேகத்தில் செயற்பட்டிருக்குமா என்பதும் சிந்திக்க வேண்டிய விடயம்.

அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்போல கிட்டுவும் குறுங்காலமே பூமியில் வாழ்ந்தாலும் அந்த இருவரைப் போலவே இவருடைய புகழும் காலம் கடந்து வாழும் என்பதில் ஐயம் எதுவும் கிடையாது.

உலகில் அதி வேகமானது ஒளி !

அந்த ஒளியைத் தருவது சூரியன் !

அந்தச் சூரியனுக்கு வானில் ஒன்பது நவக்கிரகங்கள் !

இருளைப் போக்கி ஒளியைத்தரும் வேகமான விடுதலைச் சூரியன் கிட்டு !

அவரைச் சுற்றி நவக்கிரகங்கள் போல ஒன்பது தோழர்கள் !

இது காலத்தின் விளையாட்டா ? இயற்கையின் ஈடு இணையில்லா நாடகமா ?

ஆம் !

எரியும் நெருப்பில் உயிர் விட்டு
தமிழ் ஈழம் காத்தவன் கிட்டு !
மின்னல் வேகத்தில் போரிட்டு
யாழ் மண்ணை மீட்டவன் கிட்டு !

அடுத்த வாரம் போகக் கூடாத நேரத்தில் போன உயிர் !





BY TIGERSLAND TEAM RUBAN,MOHAN, CONTACT US JASISIVA@HOTMAIL.COM AND liltamilpuli@hotmail.COM