Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

பாரதிக்குப் பின் ஓரு மேஜர் பாரதி

பாரதிக்குப் பின் ஓரு மேஜர் பாரதி

பாரதிக்குப் பின் ஓரு மேஜர் பாரதி !

பாரதிக்குப் பின் ஓரு மேஜர் பாரதி !

நெடுமையும், பழமையும் கொண்ட தமிழ்க் கவிதை உலகில் போர்க்களங்களைப் பாடிய கவிஞர்கள் உண்டு ! போர்க்களத்தில் வென்று கவிபாடிய கவிஞர்களும் உண்டு! ஆனால் போர்க்களத்தில் நின்று கவிபாடியவர்கள் இருக்கிறார்களா ?

கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கிறது !

புறநானு}ற்றில் இரண்டொரு ஆண் கவிஞர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் பெண்களை அடையாளம் காட்ட முடியாது அறிவு தடுமாறுகிறது !


இலக்கியமென்றாலே தமிழகத்திலேயே உதாரணம் தேடும் நாம் இப்படியொரு கேள்வி வந்தால் உதாரணம் தேட தமிழகத்தை விட்டு விட்டு தமழீழத்திற்குத்தான் வர வேண்டும். கவியெழுதி ! எழுதியபடியே வாழ்ந்து ! சொன்ன நெறியிலேயே நடந்து உயிரும் கொடுத்த மூன்று பெண் கவிஞர்களைக் காண்கிறோம் அவர்களே கஸ்து}ரி ! வானதி ! பாரதி !

கவியெழுதிய கஸ்து}ரியின் கை ஆனையிறவுப் படைத்தளத்தில் நடைபெற்ற மோதலில் வீரவரலாறானது ! அந்த வீர நங்கை விழுந்த நான்கே நான்கு பொழுதுகளில் அதே களத்தில் மற்றொரு கவிக்கரம் வானதி வீரமரணம் கண்டாள் ! இரு கவிச்சுடர்களின் பெருமைகளையும் கவிபாடி சிறு நாவல் குளத்தில் நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைகிறாள் மேஜர் பாரதி ! ஆகவேதான் இந்த மூவருமே தமிழீழப் போராட்டத்தில் முப்பெரும் பெண் கவிச்சுடர்கள் !

தமிழீழப் போராட்ட எழுச்சியை உயிர்த்துடிப்புடன் பதிவு செய்வதில் மற்றைய துறைகளை விட கவிதைகளே வெற்றி பெற்றுள்ளன ! சிறுகதைகளும் நாவல்களும் தமிழகத்தில் உருவானதுபோல தமிழீழத்தில் வீச்சுப் பெறவில்லை !

இந்தக் கருத்தை இப்போது அதிகமாக தமிழில் உள்ள எல்லா விமர்சகர்களும் கூறுகிறார்கள். இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ! தமிழீழம் அடைவது நமது தாகம் ! அந்தத் தாகத்தின் ஆழ்ந்து அகன்ற கூரிய பரிணாமமே தமிழீழக் கவிதைகள். ஆகவேதான் இத்தகைய கவித்துவ உயர்வை மிகப்பெரிய வெற்றியென்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலேயரின் தாக்கத்தால் தமிழுக்குக் கிடைத்தவை. ஆனால் கவிதைகளோ ஆதித் தமிழனின் ஆயிரமாயிரம் ஆண்டுகாலச் சொத்து! அந்தக் கவிதைச் சுடரை களத்தில் நின்று ஏற்றி புறநானு}ற்றுக்குப் பின் தமிழ் கவிதைகளுக்கு வீரப்பட்டாடை கட்டியோரே இந்த மூன்று சுடர்கள்.

மேஜர் பாரதி !

அவளுடைய பெயரைக் கேட்டாலே இதயம் ஒரு கணம் வணங்கி நிற்கும். கரவெட்டி கல்லுவத்தின் வஞ்சகமில்லாத கலைத்துவ அழகுக்குள்தான் அப்படியொரு கவியுள்ளம் மலர முடியும் என்று எண்ணியெண்ணித் துடிக்கிறது இதயம்.

தமிழ்க்கவிதை உலகில் பெரும் புரட்சி செய்து மகாகவி என்று பெயரெடுத்தவர் சுப்பிரமணிய பாரதியார் ! எளிமை, அழகு, உண்மை ஆகியன சேர்த்து சுதந்திரத்திற்காக கவிபாடி நாதியற்று நடு வீதியில் மரணத்துப்போன கவிஞன் !

அவனுக்குப் பின் அவனுடைய பெயரில் அவன் தொடுத்த அதே போர்க் குணங்களுடன் அவன் எடுக்கத் தவறிய ஆயுதத்தை ஒரு கையில் எடுத்து, அவன் வடித்த அதே கவித்துவப் பேனாவை மறு கையில் ஏந்தி இன்னொரு கவி வரலாறு படைத்தாள் இந்த மேஜர் பாரதி.

ஒரு போராளியின் மன உணர்வுகளை அப்படியே வெளியில் கொண்டு வரும் ஆக்கம்தான் எங்களுக்குத் தேவை ! அதுதான் இலக்கியம். புதுக்கவிதை, மரபுக் கவிதை
என்ற எல்லைக்குள் எங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாது ! இந்தக் குரலுக்கு சொந்தக்காரி வேறு யாருமல்ல இதே மேஜர் பாரதிதான். சொன்னாள் சொன்னபடி செய்தாள் ஆகவேதான் மகாகவி பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை உலகில் இவளே இன்னொரு பாரதியுமாகிறாள் !

ஒரு கவிஞருக்குரிய அத்தனை படைப்பு மனமும் சத்திய ஆவேசமும் அவளில் சுடர்விட்டு எரிந்தன. சத்தியபாமா என்ற இயற் பெயருக்கேற்ப சத்திய வெறி அவள் கவிதைகளில் அனலாகப் பறந்து வருகிறது ..

பாரதியிடம் கண்ட அதே இயல்புக்கு மீறிய வெப்பம் பல அவளிடமும் சுடர்கின்றன. அதுதானோ என்னவோ நெற்றிக் கண்ணை யார் அவள் முன்னால் காட்டினாலும் அவள் அடி பணிவதில்லை ! குற்றம் குற்றமே ! என்று நெடுநல்வாடை தந்த நக்கீரன் போல உறுதியாச் சொல்லுவாள். பின் விளைவுகள் பற்றி அவள் அஞ்சுவதில்லை. இதனால் மற்றவர்கள் அவளை குழம்பல் கேஸ் என்பார்கள். குழம்பாத நேர்கோடுகள் ஒரு போதும் சித்திரமாவதில்லை. வளை கோடுகளும், முறி கோடுகளுமே சித்திரங்களாகும். ஆகவேதான் அவள் மட்டும் அழகிய கவிதையானாள்.

என் எழுத்துக்கள் நான் வாழும் இந்தச் சமூகத்தில் ஒரு சின்னத் துடிப்பை ஏற்படுத்தினால் அதுவே என் எழுத்தின் வெற்றியென நான் உணர்கிறேன்
என்று கூறியபடி அவள் சொன்ன வரிகள் சொற்பம்தான். ஆனால் கணியன் பூங்குன்றன் கவி போல கல்வெட்டாக மனதில் பதிகின்றன அவள் எண்ணங்கள் !

பூவும் பொட்டும்
பொன்தாலி மட்டும்
போதுமென்ற தென்றல்கள்
இன்று
புயல்களாய் மாறி
புதுயுகம் காண
புறப்பட்டு விட்டன ... என்று பெண் புலிகள் பற்றிப் பாடி அந்த வீராங்கனைகள் மாவீரார்களாகி வீதி வலம் வரும் போது ...
கல்யாண ஊர்வலம்
நடத்திய
காலம் போய்
களத்தினிலேயே
கருவியை அணைத்தபடி
கருகிய தோழியின்
இறுதி ஊர்வலம்
இதோ வருகிறது ! என்று பெண்களுக்காக உயிரோடு கவிபாட உலகில் இந்தப் பாரதியை விட்டால் வேறு யாரால் முடியும்.

யார் இந்தக் கவிஞர் ? இவளுடைய ஆளுமையென்ன ? என்பதை மற்றவர் எடுத்துரைக்க வேண்டியதில்லை ! அவளின் கவிதை வரிகளே அதற்குச் சாட்சியமாகின்றன.
ஐ.நா சபை பற்றி அவள் கூறும்போது ...

கோழிச் செட்டைக்குள்
குஞ்சுகள் தான்
பாதுகாக்கப்படும் !
ஆனால் இங்கோ
பருந்துகள் தானே
பாதுகாக்கப் படுகின்றன ! என்றாள். ஐ.நா சபையின் உண்மை முகத்தை ஓர் இளம் கவிஞர் சுட்டிக் காட்டிய நேர்த்தி மேஜர் பாரதியை விட யாருக்குக் கூடும்?

புலம் பெயர் மக்களையே அவள் தமிழீழத்தில் இருந்து உன்னிப்பாக அவதானித்திருக்கிறாள்.
இன்று அங்கே
குடியுரிமை கிடைத்து விட்டதால்
குடியிருப்பையே
உறுதிப் படுத்தி விட்டீர்கள் !
கவனம்
நாளை
உயிரிருப்புக்கே
உலை வைத்து விடுவார்கள் !
என்கிறாள். பதறும் நெஞ்சைத் தொட்டுப் பார்க்கிறேன் அவளின் பார்வையை விட இனி ஒரு து}ரப்பார்வை வேண்டுமோ?

உன்னை இனம் காணத் தவறிய இலக்கிய உலகத்தின் இதயத்திற்கு இப்போதாவது தெரிந்திருக்கும் நீ இமயமென்று ! துப்பாக்கி மட்டுமே து}க்கத் தெரிந்தவர்கள்
என்ற தப்பான வெற்றுக் கேள்விகளுக்கு நீ வெடிகுண்டு என்று கவிஞர் கஸ்து}ரி வீரமரணமடைந்தபோது பாரதியின் பாடல்கள் போர்க்குரல்
கொடுக்கின்றன இது கஸ்து}ரிக்கும், பாரதிக்கும் மட்டுமல்ல மேஜர் பாரதிக்கும் பொருந்தும். அவள் -
பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையாகப் பிறந்தாள் ...
பல்கலைக் கழகத்தை உதறினாள் ...
ஏழ்மையான பெற்றோருக்காக உருகினாள் ...
தமிழினத்தின் விடுதலைக்காய் உயிர் கொடுத்தாள் ...
தன் உணர்வுகளைக் கவிதைகளாக்கிவிட்டு பறப்பெடுத்தாள் ...

கடைசியாக மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு என்ற கவிதையில் கடலோடு கரைந்த கரும்புலிகளுக்கான வரிகளை நினைக்கும்போது கவிதையின்
உணர்ச்சியால் கண்கள் கலங்குகின்றன...

கடலலையே
நீ
கரையைத் தொடும்போது
எம் மக்களுக்கு
காதோடு சொல்லிவிடு
விடுதலையை வென்றெடுங்கள்
அப்போது
அவர்கள் வருவார்கள் என்று ...

ஆம் ! கரும்புலிகள் போல பாரதியும் நம்மிடையே வருவாள் ! இந்தியாவிற்கு ஒரு வரகவி பாரதி ! அதுபோல மலரும் தமிழீழத்திற்கும் ஒரு
வரகவியாக வருவாள் ! அவள்தான் மேஜர் பாரதி !

BY TIGERSLAND TEAM RUBAN,MOHAN, CONTACT US JASISIVA@HOTMAIL.COM AND liltamilpuli@hotmail.COM