Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

WELCOME TO TIGERSLAND

முதற்பக்கம் NNT செய்திகள் NTT சஞ்சிகைகள் mp3ஆடியோ புகைப்படங்கள் வீடியோ திரைப்படம் நிழற்படங்கள் தொடர்புகளுக்கு  கவிதைகள் மாவீரர் உரை தலைவரின் புதிய படங்கள் எம்மைப் பற்றி Blog Guestbook

வணக்கம் தோழர்களே... எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.. தோழமையுடன் TIGERSLAND TM

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து.....

இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி.

 மேலும்

TIGERSLAND GROUP IN HI5

யாழ்செல்லும் பயணிகளுக்கு

          காணொளியில்

 

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய '' காலக்கணிப்பு
தமிழீழத் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிலவரம்
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய''ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்''

 

கட்டுரைகள்(ARTICL'S)

உதிப்பேனென்று போன ஆதவன்

நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை

பாரதிக்குப் பின் ஓரு மேஜர் பாரதி 

தமிழீழம்  வருமா   தலைவரின்   பேனா?

நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய்

விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு!

மாசற்ற மதியூக வீரன்

போகக் கூடாத நேரத்தில் போன உயிர்கள்

போரின் வெற்றிக்கு புது வழி சொன்னவன்

வான்புலிகளின் பாடல்கள்

குத்தாட்டம் போடடா

தமிழரின் வான்படை

SONGS

"Tamil eelam kidakkum enru thani naduu  songs

"valka thamil  songs

Mannil viluntha muthukkalea

Mavirar sumantha kanavukalil

Mavirar pukal paduvom

Mavirar yaro enral maranathai

ஒரே வயிற்றில் பிறந்த தம்பியை எப்படிச் சுடுவது....

1986ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ரவிக்குமாரும் அவரது தம்பி அன்ரனியும் ஆற்றுக்கு குளிக்கச்சென்ற வேளை சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

இருவரிடமும் கைத்துப்பாக்கி ஒன்றே இருந்தது. இராணுவம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்செல்லவும் உரிய சூழல் அங்கில்லை. உயிருடன் பிடிபட்டால் இராணுவத்தின் கொடுமைகள் எப்படி இருக்கும் என்று இருவருக்கும் தெரியும்.

இதற்கிடையில் தம்பி அன்ரனி தன்னைச் சுடுமாறு அண்ணனுக்கு கூறுகின்றான். ஒரு வயிற்றில் பிறந்து தான் தூக்கி வளர்த்த தம்பியை எப்படிச் சுடுவது, ஆனாலும் ரவிக்குமார் தேச நலனையே சிந்தித்தார்.

பகைவரிடம் பிடிபட்டு அழிய விரும்பவில்லை சொந்தத் தம்பியைச் சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுவிட்டு அந்தப்புலி வீரனும் வீரச்சாவடைந்தான்.

பிரபாகரனின் நிழலைக்கூட தொடஇயலாது-வைரமுத்து.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைத் தொடக்கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து சென்னையில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்ற முழுநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் வைரமுத்து ஆற்றிய கண்டன உரை: ஈழத்தின் செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரத்தில் கண்ணீரஞ்சலி செலுத்துவதற்காகவும் சிங்கள வெறித்தனத்துக்கு நம்முடைய கண்டனத்தைத் தெரிவிக்கவும் தமிழர் பேரவை தலைவர் சுப.வீ. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் உள்ள பிஞ்சுக் கால்களைப் பார்த்தால்- இந்தப் படத்தில் சுரைக்காய்களைப் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுப் பிணங்களைப் பார்த்தால்- இவர்கள் போராளிகளுக்காக பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லுகிற பொய் உடைகிறது என்பது நாட்டுக்கு விளங்கும். நண்பர்களே! மூன்று வேண்டுகோளோடு இங்கு வந்திருக்கிறேன முதல் வேண்டுகோள்- தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு: கும்பகோணத்தில் நடந்தது தமிழ்நாடு சகித்துக் கொள்ள முடியாத துயரம்- பள்ளிப் பிள்ளைகளின் மரணம். அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் மரணத்துக்கு தமிழ்நாடே எழுந்து நின்று அழுதது. இந்த செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரம் அந்த அளவுக்கு வருத்தியிருக்கிறதா? இல்லையா? என்பதை நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். விபத்துக்கு அழக்கூடிய தமிழன்- ந கொலைக்கு அழமாட்டாயா? என்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி கேட்க வேண்டும். இந்த துயரத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும். கடைசித் தமிழன் உள்ளவரைக்கும் அங்கு அந்தப் போராட்டம் ஓயவேப் போவதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுகிறேன். சிங்கள இராணுவம் நேற்று ஒப்புக் கொண்டிருக்கிறது- போரால் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிட முடியாது- போர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை- விடுதலைப் புலிகளை நாங்கள் வெல்ல முடியாது என்று ஒட்டுமொத்தமாக சிங்கள அரசு பதிவு செய்திருக்கிறது. பிரபாகரனின் நிழலைத் தொடக் கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்பதுதான் உண்மை. சிங்கள அரசுக்கு ஒரு வார்த்தை- யுத்தம் செய்கிறீர்களே- உங்கள் யுத்தத்தில் உணர்ச்சி இருக்கிறதா? தமிழன தன் நிலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- இனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- தன் உரிமைகளைப் பேணிக் கொள்வதற்காக- தன் பூர்வீக நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக- உணர்ச்சியோடு போராடுகிறான். ஒரு முயலை ஒரு சிங்கம் துரத்திச் செல்கிறது. சிங்கத்தின் வேகம் அதிகமா? முயலின் வேகம் அதிகமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது சிங்கத்தின் வேகம்தான் அதிகமாக இருக்கும் என்று தப்பான தகவல் தரப்பட்டது. சிங்கம் உணவுக்காக ஓடுகிறது. முயல் உயிரைக் காக்க ஓடுகிறது. முயலின் வேகம்தான் சிங்கத்தின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். அதுபோல்தான் சிங்களவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்கள்- நம் தமிழர்கள் இனமானம் காக்கப் போராடுகிறார்கள். இந்த உணர்ச்சிகள் இருக்கும் வரை அவர்களை வெல்லவே முடியாது. இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள்- இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்திய இறையாண்மைக்கு நாங்கள் என்றும் பங்கம் விளைவிப்பவர்கள் அல்ல. சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் ஒன்றே போதும் அவரது நெஞ்சின் வலி என்ன என்று. அவரால் இந்திய இறையாண்மைக்குட்பட்டு என்ன வகையில் தன் வலியை- கருத்தை வெளிப்படுத்த முடியும்- ஆதரவை தெரிவிக்க முடியும் என்பதை அவர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசே! நீ சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கினால் அங்கு தமிழினம் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும். தமிழர்களுக்கு அதுவிரோதம். ஒருவேளை இந்திய அரசு ஆயுதம் வழங்காததால் பாகிஸ்தானிடம் சிங்கள அரசு ஆயுதம் வாங்கிக் கொண்டால் அது தமிழனுக்கு மட்டும் ஆபத்து அல்ல- இந்தியாவுக்கே அது ஆபத்து என்பதை மறந்துவிடக் கூடாது. சிங்களர்கள் சூழ்ச்சிக்காரர்கள். வங்காள விரிகுடாவில் ஒரு கையை நீட்டி இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள். அரபிக் கடலில் ஒரு கையை நீட்டி பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறார்கள். இந்திய அரசே! தெளிவாக இரு! பாகிஸ்தான் ஆயுதம் உள்ளே போகாமல் தடுத்து விடு- தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆயுதம் வழங்கும் எண்ணத்தையே நிறுத்திவிடு. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரச்சனைகள் தீரும் என்று போலிக் கனவு காண நாம் தயாராக இல்லை. இது ஒரு அடையாளம். இலங்கைத் தமிழன் அங்கே பாதிக்கப்பட்டால் இங்கேயிருக்கிற தமிழன் சந்தோசத்துடன் விழித்திருக்கிற முடியாது. அவன் மகிழ்ச்சியோடு ஓய்வு கொள்ள முடியாது. அந்த இரத்தம் இங்கே துடிக்கும். அங்கே தசை விழுந்தால் இங்கே இருதயம் துடிக்கும் என்ற உணர்ச்சியை வெளிப்படுத்த இந்த உண்ணாநிலை என்றார் வைரமுத்து.

 இணைய செய்திகள்

ஆங்கிலச்செய்திகள்

தமிழ்ச் செய்தித்தாள்

பிற தளங்கள்

நிழற்படங்கள்

பிறமொழிசெய்திகள்

சஞ்சிகைகள்

தமிழ் அமைப்புக்கள்

வானொலிகள்

தொலைக்காட்சிகள்

நன்றி,
‘‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’

BY TIGERSLAND TEAM RUBAN,MOHAN, CONTACT US JASISIVA@HOTMAIL.COM AND liltamilpuli@hotmail.COM 
Free Hit Counter