Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

கவிதைகள்

முதற்பக்கம் NNT செய்திகள் NTT சஞ்சிகைகள் mp3ஆடியோ புகைப்படங்கள் வீடியோ திரைப்படம் நிழற்படங்கள் தொடர்புகளுக்கு  கவிதைகள் மாவீரர் உரை தலைவரின் புதிய படங்கள் எம்மைப் பற்றி Blog Guestbook

பாலா அண்ணாவுக்கு ஒரு கண்ணீர் மடல்.!
பாலா அண்ணாவுக்கு
ஒரு கண்ணீர் மடல் .!
ஈழமாதா பெற்றெடுத்த
தவப்புதல்வா ..!
ஈழத்தமிழர் உருமைக்காக
குரல் கொடுத்த
ஏங்கள் தேசபிதாவே ..!

பாலா அண்ணாவுக்கு
ஒரு கண்ணீர் மடல் .!
ஈழமாதா பெற்றெடுத்த
தவப்புதல்வா ..!
ஈழத்தமிழர் உருமைக்காக
குரல் கொடுத்த
ஏங்கள் தேசபிதாவே ..!
தசத்தின் குரலே பாலாண்ணா ..!
விழி கலங்கி நிக்கின்றோம்.

அகிம்சைப் போராளியாய்
அகிலமெங்கும் நீ
நடந்து
தமிழர் உருமைப் போராட்டத்தை                     
சர்வதேசத்திற்கு
எடுத்தியம்பிய மதியுரைஞரே !
உன்னையிழந்து தவிக்கின்றோம்.

முப்பதாண்டு காலம்
முளுமூச்சாய் …
விடுதலைக்காய்
வாழ்வை அற்பணித்தவரே !
எவன் காட்டிக்கொடுத்தானய்யா ?
உன்னை காலனிடம்
எவன் காட்டிக்கொடுத்தான் ..!

எத்தனை காலனிடம்
தப்பி, தப்பி பிழைத்தாய்
விடுதலையின் விதையை
விருட்சமாக்கி தந்தாய்
விடிவெட்டமுன்னம்
ஏனய்யா எம்மை
வுpட்டு ஓடி மறைந்தாய் ?

பட்டம் பதவி
சொகுசு வாழ்வு …
இவையெல்லாம்
உன் காலடியில் கிடந்தாலும்
அத்தனையையும்
உதறிவிட்டு
தம்பியை நாடியல்லவோ
வன்னிக் காடு நோக்கி
ஓடிக்கொன்டிருந்தாய் !

ஏப்படியய்யா ..
தாங்குவாரவர் உன்பிரிவை
உன்னைபு;போல்
உருமையோடு பேசுதற்கு
எனி யார் துணையிருக்கப் போகிறார்கள் .

காலக்கடிகாரம் அது
ஒடிக்கொண்டுதானிருக்கிறது
“ பாலாண்ணா “
நீயிருந்த இடம்மட்டும்

வற்றிடமாய்த்தான் இருக்கும்

பேச்சுவார்தை மேசையிலே
ஏதிரிகளை திக்குமுக்காட வைத்த
சுpங்கமே …
பேசிப் பேசி பலனில்லையென்றோ
உன் மூச்சும் பேசமறுத்ததோ ?

விடுதலைப்பாதையின்
சுவரானாய் - ஈழம்
விடுவிக்கத்தானே
அரசில் களமாடினாய்

நோயின் வலியை விட
தாய் மான வலியை
பெரிதாயெண்ணி
சிந்தை நொந்தவரே !

தலைவர் சூளுரைத்த பின்னர்
நீ வாய் திறக்கவேயில்லை
அதுதான் முடிவென்று
நீ ஓய்வெடுத்துக்கொண்டாயோ ?
ஈழத்தாய் கருவறையில்
பத்துத்திங்கள் ஓய்வெடுத்துக்கொள்
மீண்டும் விடியலோடு
உன் வருகைக்காய்
காத்திருக்கின்றேன்   ..!!!!

 ஈழம் அமைக்கலாம்…!

வன்னிதென்ற்தாலட்ட யாரும் இல்லை
தாய் தேசம் அழுகிறது தோழா!
சீரட்டா யாருமின்றி
சிறு பிள்ளை அழுகிறது தோழா!
பாலூட்ட தாயுமில்லை
படுத்துறங்க வீடுமில்லைத் தோழா!
ஏர் பிடிக்க உழவனில்லை
எந்தையர்க்கு உணவுமில்லைத் தோழா! படித்திருக்கும் பள்ளியேலாம் குண்டு
பாராமல் போடுகிறார் தோழா!
வழித்துணைக்கு வந்தவரும்
விழி மூடித் தூங்குகிறார் தோழா!
வந்த வழி எது என்று தெரியாமல்
நின்று அமைதி  பேச்சு முழிக்குதடா தோழா!
ஊரோடு வேரோடி –உன்
உறவுகளை காத்திடடா தோழா!

பாரோடு நீயும் பார்த்திருத்தல் நன்றோ
பதிலாவது கூறிடு தோழா!
வாளோடு களம் சென்றவன்
வம்சம் நாமடா தோழா!
வல்ல புலி சேனை இங்கே
வானிலும் வருகுது தோழா! –நீ
வசதியாய் வாழ்வதில்
அர்த்தம் என்னடா தோழா!?

விழி நீர் சிந்துகிறாள் தேசத் தாய்
பெற்றவன் நீ ஏன் மறந்தாய் தோழா!
சேய் தனுக்காய் ஒரு கூடு கட்டுகிறாள்
செத்தவன் போல் இருப்பதேனோ தோழா!
நேற்றுனை ஏற்றியே விமானம்
சென்றவர் இன்று இல்லை தோழா!
நோகும் அவர் உள்ளமதை –நீ
ஏனடா அறிய மறந்தாய் தோழா!
வெந்த புண்ணில் வேலாய்
எப்பிடி முடிகிறது உன்னால் தோழா!

நஞ்சை உண்டு மண் மானம்
காத்திடும் காலமுனதடா தோழா!
தமிழ் தலை வணங்காதென்று
நெஞ்சை நிமிர்த்து நீ சொல்லிடு தோழா!
நயவஞ்சகம் செய்வதை நிறுத்தியே
நாட்டினில் அன்பு வைத்திடு தோழா!
நாம் யாவரும் இணைந்தே
ஈழத்தை அமைக்கலாம் தோழா!

தேசத்தின் குரல் பாலா அண்ணனுக்கு வீரவணக்கம்.

தேசத்தின் குரல் பாலா அண்ணா
 இன்று உன்னை இழந்து நிற்கிறோம்.
 கொடு நோயிலும் வலியிலும் நீ நடத்திய
 தமிழீழ மக்களுக்கான விடுதலை வேள்வியில்
 உன் அறிவுத்திறனை பயன்படுத்தி
 தமிழீழத்திலும் சரி


 புலம் பெயர் நாடுகளிலும் சரி
 இலண்டனில் இருந்து கொண்டு
 தமிழீழ மக்களின் விடிவிற்காய்
 குரல் கொடுத்தாயே
 உங்கள் அறிவின் ஆளுமையால் 
 எங்கள் தேசத்தின் விடுதலைக்கான
 உரிமைக் குரலாய், மக்களின் குரலாய்
 ஊடகவியலாளராய், தேசத்தின் குரலாய்
 தலைவரின் அண்ணனாய்
 தலைவரின் ஆலோசகராய்
 எப்போதும் மக்களுக்காய்
 மக்கள் படும் துன்பங்களுக்கு
 முடிவு கட்ட வேண்டும் என்று
 இரவு பகல் பாராது பணியாற்றினாயே
 விடுதலைப் புலிகளை
 பயங்கரவாதிகள் என்றவர்களை 
 இல்லை அவர்கள் போராளிகள்
 உரிமைப் போர் செய்கின்ற
 விடுதலைப் போராளிகள் என்று
 உலகுக்கு உணர்த்தி
 தமிழீழ மக்களின்
 தமிழீழ போராட்டத்தை
 உலக அரசியல் அரங்கில்
 அவர்களுக்கு நியாயப்படுத்தி
 நீதி வழங்க வேண்டும் என்று
 சூழுரைத்து இயங்கிக் கொண்டிருந்த
 மாமனிதன் நீ
 இன்று உன்னை இழந்து நிற்கிறோம்


 நீ ஓர் அரசியல் ஞானி
 நீ ஓர் இராஜதந்திரி
 நீ ஓர் சிந்தனைவாதி
 நீ ஒரு மதி உரைஞர்
 நீ ஒரு மனிதநேயன்
 நீ ஒரு வரலாறு
 நீ ஒரு சகாப்தம்


 இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்
 அண்ணே இன்று நீ இல்லை
 ஆனால் உன் சிந்தனைகளை நாம்
 உள் வாங்கி எங்களுடன்
 நீ இருக்கின்றாய்
 பாலா அண்ணே நீ சாகவில்லை
 அண்ணிக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டு
 தேசத்தின் குரலே
 மீளாத் துயில் கொள்ளும் அண்ணனே
 தூங்குகிறாயே தூங்கு
 நன்றாகத் தூங்கி இளைப்பாறு
 தமிழ் வாழ் நல்லுலகம்
 என்றென்றும் உன் நினைவாக
 உனக்கு எங்கள்
 கண்ணீர் வணக்கங்கள்.

MORE COMING SOON............

ஒரு புலம்பல்

வன்னித்தென்றல்மல்லி மல்லி மகே மல்லி மல்லி
மகிந்த நான் மனந்தளர்ந்தேனடா
மகிமையான சிந்தனை கொண்டு -நான்
மார் தட்டிக் கனாக்கண்டேனடா
மறைந்து யோடும் நிலை கண்டேன்
மானம் பறிபோய் மனது துடிக்குதடா
உற்றது துணையாய் உறவையும் இணைத்தேன்
உதவிக்காய் ஒரு சிலரையும் அழைத்தேன்
உண்மையை மறைக்கும் ரம்புவும் மௌனமானான்
உறன் பிறப்பே கோத்தா நீயும் மௌனமேன்

தேரர்களை தேடினாலும் காணவில்லையடா
வீரன் வம்சாவும் வீரவேசமும் ஓய்ந்ததாடா
தலையை வெளியே நீட்டத் தயக்கம் வருகதடா
தப்பிடுமோ தலையேனும் சந்தேகம் பிறக்குதடா
எம்மனுமெமக்கெதியோ எண்ணத்தோன்றுதடா
வானத்திலும் கூட வழிபறி போனதடா
வாய்ப்பேச்செல்லாம் வலுவற்று நிக்குதடா

கோழைத்தனமென குதர்க்கமாய் சொன்னேனடா
கோழை நீதானே;று கூறுகின்றதுலகமடா
எதிர்கால நிகழ்வும் எனக்கு புரியவில்லையடா
நிகழ்கால நடப்பும் நினைவிலில்லையடா
ஓராண்டு நிறைவு ஓடி மறைந்ததாடா
ஈராண்டு முடிவு…?...?...?
ஏன் நெஞ்சு பதறுதடா…

“புதிய புலிகளே” நன்றி…

The image வானேறினான் வானோடி
விண்ணேறினான் விந்தை தமிழ் மகன்
வாளெடுத்தன்று விரட்டினான் பகை
வான் சென்றும் அழைக்கின்றான் போருக்கு
வல்லமை பெற்றவன் வார்த்தையில்
வல்லமை நாட்டினான் புலி நாட்டினில்

எழுந்தது பகை என்றும்
விழுந்தது புலி என்றும்
புலம்பியே நின்றவர் யாவரும்
விழுந்தடித்தோடியே வியப்பாய் பேசிட

எழுந்தது வானில் புலிப்பறவை
நிலத்தினில் கொண்ட வெற்றியால்
நிஜத்தனை மறந்தவன் மனதினில்
நீங்காது நிலைத்தது ஏக்கம்

ஏளனமாய் எந்தையர் கூட
எள்ளி நகையாடியே பேசிட
எவனவனோ கிள்ளி விளையாடுகிறான்
சிங்களத்தை ஆய்வு கொண்டே
நேற்றும் அன்றும் நித்தமும் எங்கள்
முற்றத்தில் வீழ்ந்த குண்டு
போட்டவன் கூண்டில் வெடித்ததின்று

போர்கலை சொல்லியே
போற்றிடும் தலைவன் கொண்டோம்
போற்றுதற்குரிய போராளிகள் கண்டோம்
போதுமே புகைச்சல் மனதில்
பொங்கிடும் புலி வீரர் இதயம் தனிலே
இருந்திடும்  தமிழீழம் ! இறுதியாய்
இலக்கு நோக்கியே

The image

எழும் எழும் வானேறிகள்
ஏறும் இயந்திர பறவை எழும்
விழும் விழும் எந்தயர் மண்ணது
எம் கைகளில் விழும்
அழும் அழும் சிஙகளம் இனி அழும்
ஆழம் ஆழும் தமிழ் இனி ஆழும்
அமெரிக்காவும்  அயல்நாடும் கூடவே
அணைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும்

ஓலங்களை உருவாக்கியவன் -எம்
மக்கள் அவலத்தில் ஆட்சி செய்பவன்
அலறியபடி அமைதி பேச அழைத்தாலும்
அதிலோன்றும் ஆச்சரியமில்லை...
நோக்கமாம் தமிழீழம் நேர்கியே
எம் படை நகரும்...

போரினில் புகுந்து புல்லரைக் கொன்று
புதிய சரித்திரம்  படைக்கும் -என்
தேசத்து தலைவனின் பார்வையில்
உருவாகி உயிராகிய
"புதிய புலிகளே" நன்றி...

 

நன்றி,
‘‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’

BY TIGERSLAND TEAM RUBAN,MOHAN, CONTACT US JASISIVA@HOTMAIL.COM AND liltamilpuli@hotmail.COM